ட்விட்டர் நிறுவனத்தை தன் வசப்படுத்திய எலான் மஸ்க் குறைந்த செலவுடன் வருமானத்தை அதிகரிக்கவில்லை எனில் நிறுவனம் திவால் ஆகிவிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலக பணக்காரர்களில் ஒருவராக திகழும் எலான் மஸ்க், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் நிறுவனர் ஆவார். 4400 கோடி டாலர்களுக்கு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய இவர், அதில் அதிரடியாக பல மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் முதல் தடவையாக நிறுவனத்தில் பணி புரியும் பணியாளர்களிடம் பேசியிருக்கிறார்.
அதன்பிறகு, செலவை குறைப்பதற்காக 50% பணியாளர்களை அதிரடியாக நீக்கியிருந்தார். இந்நிலையில், அவர் ட்விட்டரின் செலவை குறைத்துக் கொண்டு வருமானத்தை அதிகரிக்க வேண்டும். இல்லையெனில் நிறுவனம் திவால் ஆகிவிடும் என்று எச்சரித்திருக்கிறார்.