Categories
உலக செய்திகள்

இதோ அந்த கேள்விக்கான பதில்… வைரலாகும் எலான் மஸ்க்கின் ட்விட்…!!!

உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் பக்கத்தில் முதலீட்டாளர்களுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார்.

உலக பணக்காரர்களில் ஒருவராக திகழும் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கிவிட்டார். இந்நிலையில் தன் ட்விட்டர் பதிவின் மூலமாக முதலீட்டாளர்களின் நெடுநாள் கேள்விக்கு பதில் தெரிவித்திருக்கிறார். அவர் குறிப்பிட்டிருப்பதாவது, இது குறித்த கேள்வி என்னிடம் பலமுறை கேட்கப்படுகின்றன.

அதற்கான பதிலை தற்போது தெரிவிக்கிறேன். உங்களுக்கு நம்பிக்கை உள்ள பல்வேறு நிறுவனங்களிடமும் பங்குகளை பெறுங்கள். அதே சமயத்தில் அந்தந்த நிறுவனங்களின் நிலை மோசமடைந்தால் உடனே அதன் பங்குகளை விற்க வேண்டும். சந்தை இறங்கினால் பதற்றம் வேண்டாம். இது அதிக நாட்களுக்கு உங்களுக்கு பலனளிக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறார். தற்போது எலான் மஸ்கின் இந்த ட்விட் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |