உலக பணக்காரர்களில் ஒருவராக திகழும் எலான் மஸ்க், டெஸ்லா நிறுவனத்தினுடைய 29,743 கோடி பங்குகளை விற்பனை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் முதல் பணக்காரராக இருந்த எலான் மஸ்க் அந்த அந்தஸ்தை இந்த வார தொடக்கத்திலேயே இழந்துவிட்டார். இந்நிலையில் மின்சார வாகன நிறுவனமான டெஸ்லாவின் 2,20,00,000 பங்குகளை 3.58 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவில் இது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. அதே சமயத்தில், திடீரென்று இவ்வளவு பங்குகளை அவர் விற்க என்ன காரணம்? என்பது பற்றிய தகவல் வெளியாகவில்லை. அந்த வகையில், எலான் மஸ்க் இந்த வருடத்தில் தற்போது வரை டெஸ்லா நிறுவனத்தின் 40 பில்லியன் அமெரிக்க டாலர்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், டெஸ்லா நிறுவனத்தின் மிகப்பெரும் பங்குதாரராக தற்போது வரை அவர் தான் இருக்கிறார். அவருக்கு 13.4% பங்குகள் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.