Categories
உலக செய்திகள்

இது முட்டாள்தனம்… பல மடங்கு மக்கள் தொகையை பூமி தாங்கும்…. எலான் மஸ்க் கருத்து…!!!

உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தற்போது இருக்கும் மக்கள் தொகை எண்ணிக்கையை காட்டிலும் பல மடங்கு மக்களை பூமி தாங்கும் என்று கூறியிருக்கிறார்.

ஜப்பான் நாடு வல்லரசு நாடாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. பொருளாதார அடிப்படையில் முன்னேற்றம் கண்ட நாடாக இருக்கும் ஜப்பானில் தொடர்ச்சியாக மக்கள்தொகை குறைந்து கொண்டிருக்கிறது. அந்நாட்டில் அதிகமாக முதியவர்கள் தான் இருக்கிறார்கள். எனவே, பிறப்பு விகிதம் ஜப்பானில் அதிகரிக்கப்பட வேண்டும்.

இல்லையெனில், ஜப்பான் என்ற ஒரு நாடு காணாமல் போகும் என்று டெஸ்லா நிறுவன சிஇஓ  எலான் மஸ்க் இதற்கு முன்பு கூறியிருந்தார். இந்நிலையில் மக்கள் தொகை வீழ்ச்சி பற்றி அவர் தெரிவித்ததாவது, மக்கள் தொகை வீழ்ச்சி என்பது, நாகரிகத்திற்கான கடுமையான அச்சுறுத்தல் என்றார்.

மேலும், சுற்றுச்சூழல் பாதிப்படையும் என்பதால் தான் மக்கள் குழந்தைகள் பெற்றுக் கொள்வதில்லை என்று கூறுவது முட்டாள்தனம் என்று கூறியிருக்கிறார். மேலும் தற்போது இருக்கும் மக்கள் தொகை எண்ணிக்கையை காட்டிலும் பல மடங்கு மக்கள் தொகையை தாங்கக்கூடிய திறன் பூமிக்கு இருக்கிறது. சுற்றுச்சூழலும் நன்றாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |