Categories
உலக செய்திகள்

எலான் மஸ்க்கை இன்ஸ்டாகிராமில் விமர்சித்த…. பிரபல நாட்டு ராப் பாடகர்…. எதற்காக தெரியுமா….?

ராப் பாடகரான கன்யே வெஸ்ட், எலான் மஸ்க்கை உருவக்கேலி செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். 

அமெரிக்க நாட்டின் ராப் பாடகரான கன்யே வெஸ்டின் பலமுறை கிராமிய விருதுகளை வென்றவராவர். இவருக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். கன்யே வெஸ்டினின் டுவிட்டர் கணக்கு திடீரென முடக்கப்பட்டுள்ளது. இவரின் சர்ச்சைக்குரிய பதிவையடுத்து டுவிட்டர் கணக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து கன்யே வெஸ்டின் தனது டுவிட்டர் பக்கத்தில் ஹிட்லர் மற்றும் நாசிசவாதம் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இது குறித்து கன்யே வெஸ்டினுடன் எலான் மஸ்க்  உரையாடிய பதிவையும் அவர்  டுவிட்டரில் பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். எனவே டுவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் கடுமையான நடவடிக்கையின் அடிப்படையில் இவரது கணக்கை இடைநீக்கம் செய்துள்ளார்.

இந்நிலையில் அவரது கருத்துக்கள் வன்முறையை தூண்டும் வகையில் உள்ளது. இதனைதொடர்ந்து கன்யே வெஸ்டின், எலான் மஸ்க்கை கிண்டல் செய்யும் வகையில் உருவ கேலி செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதில் அவர் கூறியதாவது, “எலான் மஸ்க் பாதி சீனராக இருக்க முடியும் என்று நான் மட்டும் நினைக்கிறேனா? அவருடைய சிறு வயது படங்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? ஒரு சீனா நாட்டு மேதையை அழைத்து தென்னாப்பிரிக்கா சூப்பர் மாடலுடன் இணைத்துக் கொண்டால் கிடைத்து விடுவார் எலான் மஸ்க். இதை போன்று 10 முதல் 30 எலான்களைை பயன்படுத்தி உருவாக்கலாம். இவர் தான் முதல் மரபணு கலப்பினமாகும். அதே சமயத்தில் ஒபாமாவை நாம் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும் தேவாலயத்தில் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தியதற்கு என்னை மன்னிக்கவும்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |