தோட்டத்தில் புகுந்த காட்டுயானைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறையிடம் தோட்ட உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள மோட்டை வன சரக பகுதியில் பல வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றது. இந்த வன சரகத்திற்கு உட்பட்ட இடத்தில் வாழை, பாக்கு, தென்னை போன்றவற்றை பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த பகுதியில் திடீரென சில காட்டு யானைகள் புகுந்து வாழை, தென்னை ,பாக்கு போன்ற மரங்களை வேரோடு பிடுங்கி நாசப்படுத்தியுள்ளன.
இதனால் தோட்ட உரிமையாளர்கள் காட்டு யானைகள் அடிக்கடி புகுந்து பயிர்கள் அனைத்தையும் நாசப்படுத்தி விடுவதால் அதிக நஷ்டம் ஏற்படுகிறது என்று வேதனையுடன் கூறியுள்ளனர். இதையடுத்து தோட்ட உரிமையாளர்கள் வனத்துறையினரிடம் இவ்வாறு காட்டு யானைகள் தோட்டத்திற்குள் புகுந்தால் அதிக நஷ்டம் ஏற்படும் என்றும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் .