Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கெங்கையம்மன் சிரசு கொடைவிழா…. எளிமையான முறையில் நிறைவுபெற்றது…. அதிகாரிகளின் பாதுகாப்பு பணிகள்….!!

வேலூரில் சமூக இடைவெளியுடன் கொடைவிழா எளிமையான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது.

வேலூர் மாவட்டத்தில் கெங்கையம்மன் கொடை விழா வருடந்தோறும் கோலாகலமாக நடைபெற்று வந்திதிருக்கின்றது. இந்த கொடைவிழாவில் தமிழ்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த கொடை  விழாவினால் குடியாத்தம் பகுதி மட்டுமல்லாமல், அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளும் விழாக்கோலம் போல் காட்சியளித்தன. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால், தமிழகம் முழுவதும் கொடை விழாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கோவில் கொடை விழாவை நடத்துவதற்கு அரசிடம் பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த கோரிக்கையை கலெக்டர் சண்முகசுந்தரம் ஏற்றுக்கொண்டு குறைந்தளவு பொதுமக்கள் மற்றும் பணியாளர்கள் வைத்து கொடைவிழாவை நடத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளார். இதனையடுத்து கொடைவிழா எளிமையான முறையில் நடைபெற்று வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து சண்டாளட்சி  அம்மன் உடலில் கெங்கையம்மன் சிரசு பொருத்தப்பட்டு மீண்டும் அம்மன் உடலிலிருந்து சிரசு  பிரிக்கப்பட்டு கோவிலுக்குள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கொடைவிழா 1 1/2 மணி நேரத்தில் எளிமையான முறையில் நிறைவுபெற்றது.

இந்த விழாவில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் சமூக இடைவெளி பின்பற்றியும், அனைவரும் முக கவசம் அணிந்தும் மற்றும் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்து கொண்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் குடியாத்தம் உதவி கலெக்டர் ஷேக்மன்சூர், வி.அமலு எம்.எல்.ஏ., ஊர் நாட்டாமை ஆர். ஜி. சம்பத் மற்றும் கோவில் நிர்வாகிகள் போன்றோர் கொடைவிழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

இதனையடுத்து வேலூர் சரக டிஐஜி காமினி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் ஆகியோர் மேற்பார்வையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி, குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதரன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் தலைமையில்5 இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது  கோவில் அருகில் இருக்கும் தெருவில் இருந்து பக்தர்கள் கோவிலுக்கு வருகையில் சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டதால், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர்.

Categories

Tech |