Categories
உலக செய்திகள்

‘அடக்கடவுளே! இதுவேறயா’…. எலிக்காய்ச்சலால் அவதி…. பிரபல நாட்டில் பீதியில் மக்கள்….!!

எலிக்காய்ச்சல் பரவலால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கையிலுள்ள இரத்தினபுரி மாவட்டத்தில் விவசாயம் போன்றவற்றுடன் தொடர்புடைய நிலத்தொழில்களை வாழ்வாதாரமாக கொண்டு பலர் வாழ்கின்றனர். அவர்கள் தமது அன்றாட வேலைகளை கூட எலிக்காய்ச்சல் பரவக்கூடும் என்ற அச்சத்திலேயே செய்வதாக  கூறப்படுகிறது. ஏற்கனவே கொரோனா தொற்றின் காரணமாக 5,00,000த்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு 13,000 பேர் உயிரிழந்துவிட்டனர்.

இந்த நிலையில் எலிக்காய்ச்சல் இலங்கையில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இருப்பினும் கொரோனா தொற்றின் பரவலால் எலிக்காய்ச்சலின் மீது கவனம் குறைந்துள்ளது. மேலும் கடந்த ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலப்பகுதியில் அம்மாவட்டத்தில் உள்ள 19 சுகாதாரப் பிரிவுகளில் 344 பேர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஐந்து பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |