Categories
உலக செய்திகள்

குட்டைக்கு வந்த குட்டி யானை…. ஆபத்தை உணர்ந்த தாய்…. வைரலாகும் ஆக்ரோஷமான வீடியோ….!!

முதலையிடமிருந்து தனது குட்டியை காப்பாற்றுவதற்காக தாய் யானை அதனை மிதித்துக் கொன்ற சம்பவமானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கிழக்கு ஆப்பிரிக்கா நாட்டில் ஜாம்பியா என்னும் நகரத்தில் வனவிலங்கு சரணாலயம் ஒன்று அமைந்துள்ளது. இந்த வனவிலங்கு சரணாலயத்தை சுற்றி பார்க்க ஒரு நபர் சென்றுள்ளார். அவர் சுற்றி பார்த்துக் கொண்டிருக்கும் போது  அங்கிருந்த குட்டையில் தாய் யானையும் அதன் குட்டியும் தண்ணீர் குடிப்பதற்காக வந்துள்ளது.

இதனையடுத்து அந்த குட்டையில் இருந்த முதலை குட்டி யானைக்கு அருகில் வந்துள்ளது. இதனை கண்ட தாய் யானை அந்த முதலையால் தனது குட்டிக்கு ஏதேனும் ஆபத்து வருமோ என்று எண்ணியது. உடனடியாக தாய் யானை ஆக்ரோஷமாக அந்த முதலையை தாக்கி தனது கால்களால் மிதித்து கொன்றுள்ளது. இந்த சம்பவத்தை அந்த நபர் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.

Categories

Tech |