தமிழகம் முழுவதும் மின் வாரியம், மின் நுகர்வோர் மற்றும் மக்கள் பயன்பாட்டிற்கு மூன்று புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. www,tangedco,org, www.tantransco.org, www.tnbltd.org ஆகிய இணையதளங்கள் மூலம் மின் கட்டணம் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக மின் கட்டணம் செலுத்துவத்தை பொதுமக்களுக்கு எளிதாக்கும் வகையில் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களையும், பல்வேறு தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது தமிழக அரசும் புதிய தொழில்நுட்பத்தை, தொழில்நுட்ப ரீதியாக புதிய முறையை மின் கட்டணம் செலுத்துவதில் கொண்டுவந்துள்ளது. இது பல்வேறு தரப்பினரின் பாராட்டை பெற்றுள்ளது.