வேலை பார்த்து கொண்டிருக்கும் போது மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எலக்ட்ரிக்கல் காண்ட்ராக்டராக இருக்கின்றார். இந்நிலையில் குமாரின் வீட்டை புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்த வீட்டில் எலக்ட்ரிக்கல் பணிகள் நடைபெற்று கொண்டிருந்த போது கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வீரண்ணா என்பவரை மின்சாரம் தாக்கி விட்டது.
இதனால் படுகாயமடைந்த வீரண்ணா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று வீரண்ணாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.