Categories
இந்திய சினிமா சினிமா

என்னாது!… மன்னர் சிவாஜி காலத்தில் மின் விளக்கா….? அது எப்படிப்பா….? பிரபல நடிகரை ட்ரோல் செய்யும் நெட்டின்ஸ்….!!!!!

இந்தி சினிமா தான் இந்திய சினிமா என்ற நிலை மாறி தற்போது தென்னிந்திய திரைப்படங்கள் அனைத்து மொழிகளிலும் ரீலிஸ் செய்யப்பட்டு பட்டையை கிளப்பி வருகிறது. அதன்பிறகு சமீப காலமாகவே பாலிவுட் சினிமாக்களில் வெளிவரும் படங்கள் தோல்வியை சந்தித்து வரும் நிலையில், முன்னணி நடிகர்களின் படங்கள் கூட ரசிகர்களை பெரிய அளவில் ஈர்க்கவில்லை. அந்த வகையில் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான சாம்ராஜ் பிரித்திவிராஜ் மற்றும் ராம் சேது ஆகிய 2 படங்களும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

இந்த 2 படங்களும் வரலாற்று நிகழ்வுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட நிலையில், தற்போது தன்னுடைய‌ 3-வது வரலாற்று படம் குறித்த அறிவிப்பை அக்ஷய்குமார் வெளியிட்டுள்ளார். அதன்படி இந்தியாவின் தலைசிறந்த மன்னர்களில் ஒருவரான மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் வரலாற்று படத்தில் தான் அக்ஷய்குமார் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு வேதாத் மராத்தே வீர் டவுட்லே சாத் என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில், மகேஷ் மஞ்சரேக்கர் இயக்குகிறார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Akshay Kumar (@akshaykumar)

 

இந்நிலையில் அக்ஷய் குமார் தன்னுடைய வலைதள பக்கத்தில் சிவாஜி வேடத்தில் தான் இருக்கும் ப்ரோமோ வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அக்ஷய் குமாரை கலாய்க்க தொடங்கி விட்டனர். அதாவது அந்த வீடியோவில் மின் விளக்குகள் இருக்கிறது. மேலும் 16-வது நூற்றாண்டில் வாழ்ந்த சிவாஜியின் காலத்தில் 18-வது நூற்றாண்டில் கண்டுபிடிக்கப் பட்ட மின்விளக்குகள் எப்படி வந்தது என்று நெட்டிசன்கள் பலரும் ட்ரோல் செய்து வருகிறார்கள்

.https://twitter.com/nikhil_24511/status/1600077939353083904?s=20&t=npmvLaBArdMrPhy2ZWi-qw

Categories

Tech |