Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளாதவர்கள்  மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு!!!

உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் குறித்த பயிற்சி கூட்டத்தில் பங்குபெறாத ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் மலர்விழி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. உள்ளாட்சித் தேர்லுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில், தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு தேர்தல் பணிகள் குறித்த முதற்கட்ட பயிற்சி வகுப்பு கடந்த 15ஆம் தேதி நடைபெற்றது. 13,595 பணியாளர்களுக்கு நடைபெற்ற இந்த பயிற்சியில் 694 பேர் கலந்துகொள்ளவில்லை.

இதனையடுத்து, தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்குபெறாத 694 பேர் மீதும் தேர்தல் விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி, பயிற்சியில் கலந்துகொள்ளாத ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும் தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவருமான மலர்விழி உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |