டெல்லியில் தமிழக ஆளுநர் முக்கிய விவகாரங்கள் குறித்து பேசியதாக ஆளுநர் அலுவலகம் செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளது.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அதன்பிறகு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்கையும் சந்தித்துள்ளார். இன்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவையும் சந்தித்து இருக்கிறார். தற்போதும் அவர் டெல்லியில் தான் தங்கி இருக்கிறார். இத்தகைய சூழ்நிலையில் ஆளுநர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலே தமிழ்நாடு குறித்த முக்கிய விவகாரங்கள் விவாதிக்கப்பட்டதாக சொல்லப்பட்டு இருக்கிறது.
தமிழகத்தில் இன்னும் ஆறு மாதத்திற்குள் தேர்தல் வர இருக்கிறது. அதே சமயத்தில் பல்வேறு விதமான அரசியல் நிகழ்வுகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. ஒருபுறம் பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்க வேண்டும் என்று நீதிமன்ற வழக்குகள், அரசியல் ரீதியாக அரசியல் அழுத்தம் என்றெல்லாம் சென்றுகொண்டிருக்கிறது. இத்தகைய சமயத்தில் இந்த அறிக்கை வெளி வந்திருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. எனவே ஆளுநரின் டெல்லி பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.