வேட்பாளர்களர் செலவு செய்யும் போது அதற்கான விலை இவ்வளவு தான் இருக்க வேண்டுமென்று தீர்மானித்துள்ளது .
மக்களவை தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி மே 19 வரை ஏழு கட்டமாக நடை பெறுவதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது . மேலும் தேர்தல் நடத்தை விதிமுறை அமுலுக்கு வந்துள்ளது . இந்நிலையில் தேர்தல் ஆணையமும் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது .
மேலும் மக்களவைத் தேர்தலுக்கு ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக 70 லட்சம் ரூபாய் வரையும் , சட்டமன்ற வேட்பாளர் ரூ 28 வரையும் செலவு செய்து கொள்ளலாம் என்றும் 50,000_த்திற்கும் மேல் பணம் கொண்டு சென்றால் உரிய ஆவணம் சமர்ப்பிக்க வேண்டுமென்றும் இதை செலவின பார்வையாளர்கள் கண்காணிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது .
இதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் சார்பில் வேட்பாளர்களுக்கு விலைப்பட்டியல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது அதன் விவரம் வருமாறு:
மட்டன் பிரியாணி – ரூபாய் 200
சிக்கன் பிரியாணி – ரூபாய் 180
காலை உணவு – ரூபாய் 100
வெஜிடபுள் பிரியாணி – ரூபாய் 100
மதிய உணவு – ரூபாய் 100
குளிர்பானங்கள் – ரூபாய் 75
இளநீர் – ரூபாய் 40
தண்ணீர் 1லி – ரூபாய் 20
பொன்னாடை – ரூபாய் 150
பூ – ரூபாய் 60
புடவை (பூனம் ) – ரூபாய் 200
டீ சர்ட் – ரூபாய் 175
தொப்பி – ரூபாய் 50
பிளிச்சிங் பவுடர் – ரூபாய் 90
பூசணிக்காய் – ரூபாய் 120
வாழைமரம் – ரூபாய் 700
தொழிலாளர் செலவு – ரூபாய் 450 (8 மணி நேரத்திற்கு) ஓட்டுனர்கள் – 695 ரூ ( 8 மணி நேரத்திற்கு)
பட்டாசு -ரூபாய் 600
மேளம் – ரூபாய் 4500 (4 மணி நேரம்)
மண்டபம் – 2000 முதல் 6000 வரை
ஏசி அறைகள் ( 5stars ) – ரூபாய் 9300
ஏசி அறைகள் (3stars ) – ரூபாய் 5800
வேட்பாளர் செலவு இதன் அடிப்படையிலேயே கணக்கிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது .