Categories
மாநில செய்திகள்

“அடேங்கப்பா!”…. இத்தனை பேரா….? வாக்குச்சாவடிகளில் குவிக்கப்படும் அதிகாரிகள்…!!

சென்னை மாநகராட்சி தேர்தல் பாதுகாப்பு பணியில் 18,000 காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கான தேர்தலுக்கு மொத்தமாக இருக்கும் 200 வார்டுகளில் ஊர்க்காவல் படையை சேர்ந்த 3000 பேர் உட்பட மொத்தமாக சுமார் 18,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியை மேற்கொள்ளவுள்ளதாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியிருக்கிறார்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது தொடர்பில் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் ககன்தீப் சிங் பேடி, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் தலைமையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்திருக்கிறது.

அதன் பிறகு, ககன்தீப் சிங் பேடி பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்ததாவது, இன்று வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைகிறது. பிரச்சாரம் மேற்கொள்ள வேட்பாளர் ஒருவருக்கு மூன்று வாகனங்கள் தான் அனுமதிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் வரும் 17ஆம் தேதிக்கு பின் அதிகமான பறக்கும் படை குழுக்கள் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவை கண்காணிப்பதற்காக, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவுள்ளது. அதோடு ஒரு நுண் பார்வையாளரும் நியமிக்கப்படவிருக்கிறார் என்று தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |