7 சட்டமன்ற தொகுதிகளிலும் 142 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்பதால் தேர்தலின் போது கூடுதல் பாதுகாப்பு அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடக்க இருக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை, ஆத்தூர், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், பழனி, வேடசந்தூர், நத்தம் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இந்த தொகுதிகளில் மொத்தம் 1973538 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் 2503 வாக்குச்சாவடிகள் இருக்கின்றன. இதில் தேர்தல் ஆணையம் 1050 க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடியை இரண்டாகப் இருக்கும்படிதேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவின் பெயரில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 1050 க்கும் மேல் வாக்காளர்கள் உள்ள வாக்குச் சாவடிகள் பிரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. மேலும் தேர்தலின்போது பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்டறியப்பட்டு வருகின்றன.
ஒட்டன்சத்திரம் தொகுதியில் 23 சாவடிகளும் பழனி தொகுதியில் 12 வாக்குச் சாவடிகளும், திண்டுக்கல் தொகுதியில் 35 வாக்குச் சாவடிகளும், நிலக்கோட்டை தொகுதியில் 32 வாக்குச்சாவடிகளும், நத்தம் தொகுதியில் 12 வாக்குச்சாவடிகளும், ஆத்தூர் தொகுதியில் 20 வாக்குச் சாவடிகளும், வேடசந்தூர் தொகுதியில் 8 வாக்குச் சாவடிகளும் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த 142 வாக்குச்சாவடிகளில் மட்டும் கூடுதல் பாதுகாப்பு அளிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.