ராகுல் காந்தியின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருவதை தொடர்ந்து இணையவாசிகள் அவர்களிடம் டிப்ஸ் கேட்டு வருகின்றனர்.
இந்த ஆண்டு தேர்தல் ஆணையம் தமிழ்நாடு, கேரளா,மேற்கு வங்கம் ,அசாம் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் அறிவித்துள்ளது . இந்நிலையில் அனைத்துக் கட்சியினரும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்கள்.காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ராகுல் காந்தியும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
இதனைத் தொடர்ந்து கேரளாவில் பரப்புரை நடத்தியுள்ளார். அப்போது அங்கிருந்த மீனவர்களுடன் கடலில் நீச்சல் அடித்துள்ளார். அதன்பின் ராகுல் காந்தி படகில் நிற்பதுபோல் புகைப்படம் எடுத்துள்ளார். அப் புகைப்படத்தில் அவருக்கு 6 பேக் இருந்துள்ளது. இதனைப் பார்த்த இணையத்தள வாசிகள் ராகுல் காந்தியிடம் டிப்ஸ் கேட்டு வருகிறார்கள்.