Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… லஞ்சம் வாங்கிய அதிகாரிகள்… காவல்துறை சூப்பிரண்டு உத்தரவு…!!

சிறுமியைப் கெடுத்து கர்ப்பமாக்கிய முதியவரையும் அவருக்கு துணை புரிந்த பெண் ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 70 வயது முதியவர் வசித்து வருகிறார். இவர் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் தனது பேத்தியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அச்சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். இந்நிலையில் முதியவர் மற்றும் 60 வயதுடைய பெண் ஒருவர் மூலமாக அச்சிறுமியை சிகிச்சைக்காக மன பூண்டில் வசிக்கும் செவிலியர் ராஜாமணி என்பவரிடம் அனுப்பி வைத்துள்ளார். அங்கு சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பிறகு காலை நேரத்தில் மயக்கம் தெளிந்த சிறுமியிடம் உனக்கு பிறந்த பெண் குழந்தை இறந்துவிட்டதாக அந்தப் பெண் மற்றும் அவரது தாத்தா தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இறந்த குழந்தையை அந்தப்பெண் ஒரு பையில் வைத்து ஆற்றில் வீசியுள்ளார். இது பற்றிய புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து முதியவர் மற்றும் அவருக்கு உதவி செய்த பெண் ஆகியோரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் செவிலியர் ராஜா மணியை சேர்க்காமல் இருப்பதற்காக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் இளவழகி மற்றும் ஏட்டுகள் கோகிலா, கீதாராணி போன்றோரிடம் இருந்து 23, 500 ரூபாய்யை லஞ்சமாக வாங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது.

அதன் பின் இது சம்பந்தப்பட்ட ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் தீவிர விசாரணை நடத்தியுள்ளார். இதில் காவல்துறையினர் லஞ்சம் பெற்றது தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதனால் கீதாராணி, கோகிலா ஆகிய 2 ஏட்டுகளையும் பணியிடை நீக்கம் செய்துள்ளனர். மேலும் இன்ஸ்பெக்டர் இளவழகி இம்மாவட்டத்தின் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்தும் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |