கொழும்பில் ஈஸ்டர் தினத்தன்று மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்குப் பின்னணியில் இருந்தவர்களை காவல்துறை தற்போது கைது செய்துள்ளது.
கொழும்பில் கடந்த 2019ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த ஈஸ்டர் தினத்தன்று மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு பின்னணியில் மூளையாக இருந்து செயல்பட்டவர் மதகுரு நௌபர் மௌல்வி என தற்போது காவல்துறையில் அடையாளம் காட்டப்பட்டு பிடிபட்டுள்ளார். இந்தத் தாக்குதலுக்காக அவருக்கு உடந்தையாக இருந்த அஜ்புல் அக்பார் செயல்பட்டதாக தெரியவந்துள்ளது.
மேலும் 211 பேரை காவல்துறை கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்நிலையில் தாக்குதல் குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு மந்திரி அட்மிரல் சரத் வீரசேகர கூறியது இந்த கொழும்பு தாக்குதலில் சுமார் 269 பேர் கொல்லப்பட்டது குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க இருப்பதாக அந்நாட்டு அரசு தரப்பில் அறிவித்தார்.
இந்தத் தாக்குதலை ஐ எஸ் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்த 9 பேர் கொண்ட குழு மேற்கொண்டுள்ளதாக கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து ஈஸ்டர் தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஒருவரின் மனைவியான சாரா ஜாஸ்மீன் உயிருடன் இருந்தால் இண்டர்போல், இந்தியாவின் உதவியுடன் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.