இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.
கடந்த ஆண்டு இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி ஒயிட்- பால் கிரிக்கெட் போட்டியில் விளையாட திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக போட்டிகள் ரத்து செய்யப்பட்டது. இதனால் இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது, எனவே இதனை ஈடுகட்டும் வகையில் வருகின்ற ஜூலை மாதம், இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் கூடுதல் போட்டிகளை நடத்தினால், டெலிவிஷன் உரிமை மூலமாக கிரிக்கெட் வாரியத்திற்கு அதிக வருவாய் ஈட்ட முடியும்.
எனவே பிசிசிஐ-யிடம் கூடுதல் போட்டிகளில் விளையாட இலங்கை கேட்டுக்கொண்டுள்ளது. இதற்கு பிசிசிஐ சம்மதம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இந்தியா – இலங்கை தொடரில் , கூடுதலாக இரண்டு போட்டிகள் நடைபெற இருக்கிறது. இதைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய நாடுகள் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. இதனால் அவர்களிடமும் கூடுதல் போட்டியில் விளையாடுவதற்கு வலியுறுத்த உள்ளோம் என இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைவரான ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார்.