Categories
உலக செய்திகள்

ஐரோப்பாவில் தொடங்கப்பட்ட டெஸ்லா தொழிற்சாலை…. எலான் மஸ்க் உற்சாக நடனம்…!!!

ஐரோப்பாவின் முதல் டெஸ்லா தொழிற்சாலையின் துவக்க விழாவில் எலான் மஸ்க் நடனமாடிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.

டெஸ்லா நிறுவனமானது உலகின் முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனத்தை உலகப் பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் எலான் மஸ்க் நடத்திக்கொண்டிருக்கிறார். சமீப வருடங்களில் டெஸ்லா நிறுவனம் உலகம் முழுக்க தங்களின் தொழிற்சாலையை விரிவுபடுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறது.

ஆனால், கொரோனா காரணமாக அந்த முயற்சியில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் ஐரோப்பாவில் டெஸ்லா நிறுவனத்தின் முதல் தொழிற்சாலையை ஜெர்மன் தலைநகர் பெர்லினுக்கு அருகே நேற்று அதிகாரபூர்வமாக தொடங்கியுள்ளனர். இந்த தொடக்க விழாவில் டெஸ்லா நிறுவனத் தலைவரான எலான் மஸ்க், நடனம் ஆடியிருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |