Categories
உலக செய்திகள்

OMG….!! மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட எலன்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

எலன்  மஸ்கிற்கு மீண்டும் தொற்று ஏற்பட்டுள்ளது.

டெஸ்லா மோட்டார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் உலக பணக்காரர்களின் பட்டியலில் முன்னணி அந்தஸ்தைப் பெற்றவர் எலன் மாஸ்க். இவர் சமீபத்தில் பெர்லினில் தனது நிறுவனத்தின் முதல் ஐரோப்பிய கிளையை தொடங்கி உள்ளார். அவர் பெர்லினுக்கு தனது தனியார் ஜெட் விமானம் மூலம் சென்று வந்துள்ளார்.

இந்தநிலையில் தற்போது அவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில்  “எத்தனை மரபணு மாற்றங்களுக்கு பின் அது கோவிட்-19 ஆக உருமாறியது. எனக்கு மீண்டும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை” என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில் முன்னதாகவே கடந்த ஆண்டு கொரோனா வைரஸுக்கு பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் எலன் மாஸ்க் வைரஸ் மற்றும் தடுப்பூசி மீதான பல்வேறு சந்தேகங்கள் குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |