Categories
உலக செய்திகள்

“என் நிறுவன பங்குகள் அனைத்தையும் விற்கத் தயார்”…. ஐநா சபைக்கு உலகின் பெரும் பணக்காரர் விடுக்கும் சவால்….!!

உலக பணக்காரர்களின் மொத்த வருமானத்தில் வெறும் இரண்டு சதவிகிதத்தை வைத்து உலக மக்களின் பசியைப் போக்க முடியும் என ஐநா சபை நிரூபித்தால் டெஸ்லா பங்குகள் அனைத்தையும் விற்றுவிடுவதாக அதன் உரிமையாளர் எலன் மாஸ்க் சவால் விடுத்துள்ளார்.

உலகில் வாழும் பெரும் பணக்காரர்களின் மொத்த வருவாயில் வெறும் இரண்டு சதவிகிதம் அதாவது 6 மில்லியன் டாலர் தொகையில் உலகில் உள்ள அனைத்து மக்களின் பசியைப் போக்க முடியும் என ஐக்கிய நாடுகள் சபை நிரூபித்தால் அதற்காக தனது நிறுவனமான டெஸ்லாவின் பங்குகள் அனைத்தையும் விற்க தயாராக இருப்பதாக எலன் மாஸ்க் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தொகையை ஐநாவின் WFP எவ்வாறு செலவிடுகிறது என்பதை மக்களுக்கு வெளிப்படையாக காட்ட வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

உலகில் மொத்தம் 42 மில்லியன் மக்கள் பசியால் மரணம் அடைவதாகவும் இவர்களின் பசியைப் போக்குவதற்கு ஆறு மில்லியன் டாலர்கள் தேவைப்படுவதாகவும் எலன் மாஸ்க் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரின் மொத்த சொத்து மதிப்பு 306 மில்லியன் டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஐநா சபையின் நிர்வாக இயக்குனர் டேவிட் பெயசலே உலக மக்களின் பசியைப் போக்க உலகின் பெரும் பணக்காரர்கள் முன்வரவேண்டும் என தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |