இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தயுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திரியாலம் டி.வி துரைசாமி பகுதியில் விஜயகுமார் என்பவர் கட்டிடத் தொழிலாளியாக வசித்து வருகின்றார். இவருக்கு கவுதமி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கவுதமிக்கு குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்து விட்டது. இதனால் கவுதமி மனமுடைந்து வந்துள்ளார். இந்நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த கவுதமி வீட்டில் இருந்த விஷத்தை குடித்து விட்டார்.
அதன்பின் மயங்கி விழுந்த அவரை வீட்டில் இருப்பவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கவுதமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து கவுதமியின் தந்தை கோபாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின்படி ஜோலார்பேட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் வழக்குப்பதிவு செய்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் திருமணம் முடிந்து 3 வருடங்கள் மட்டுமே இருப்பதால் கவுதமியின் இறப்பு குறித்து கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.