தாய்-மகன் இருவரும் சேர்ந்து இளம்பெண்ணை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி பகுதியில் சரோஜா என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ஐயப்பன் என்ற மகன் இருக்கின்றார். மேலும் ஐயப்பனுக்கு கௌசல்யா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ஐயப்பன் கௌசல்யாவை அடிக்கடி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளார். இதற்கு ஐயப்பனின் தாய் சரோஜாவும் உடந்தையாக இருந்துள்ளார். இதனையடுத்து தாய் வீட்டுக்கு சென்ற சரோஜாவை ஆடிப்பெருக்கு அன்று ஐயப்பன் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் மீண்டும் சரோஜாவை வரதட்சணை கேட்டு தாய் -மகன் இருவரும் கொடுமைப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து கௌசல்யாவை தூக்கில் தொங்கவிட்டு கதவை அடைத்து விட்டு தாய்-மகன் இருவரும் தப்பி சென்றுள்ளனர். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கௌசல்யாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய தாய்-மகன் இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.