மியான்மர் ராணுவத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதால் மூவிரல் சின்னம் காட்டி நன்றி தெரிவித்தனர்.
மியான்மார் நகரில் கடந்த சில மாதங்களாகவே ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது . அந்தப் போராட்டத்தில் ஏராளமான மக்கள் பங்கேற்றுள்ளனர் . மேலும் அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் சிலர் ராணுவத்தினரால் தாக்கப்பட்டு பரிதாபமாகஉயிரிழந்துள்ளனர். அதுமட்டுமன்றி படுகாயமடைந்தோர் ஏராளம்.
ஆனால் இதை எல்லாம் பொருட்படுத்திக்கொள்ளமால் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.அதனால்628பேர் தற்போது வரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை யங்கூன் நகரில் உள்ள இன் செயின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.மேலும்கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலும் இளைஞர்கள் உள்ளனர்இதனையடுத்து போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி பல வாரங்களாக போராட்டம் மேலும் தீவிரம் அடைந்தது.
அதனால் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர் . அவர்கள்அனைவரும் இன்செயின் சிறையில் இருந்து பேருந்து மூலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். ராணுவத்துக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களை விடுவிப்பது இதுவே முதல் முறை. அதனால் விடுதலை செய்யப்பட்ட இளைஞர்கள் போராட்டத்தின் மூவிரல் சின்னமான வணக்கத்தை செலுத்தியவாறு வெளியே வந்துள்ளனர்.