Categories
மாநில செய்திகள்

கிடுகிடுவென சரிந்தது… நோய் பரவும் அபாயம்… அரசு தீவிர கட்டுப்பாடு…!!

பறவை காய்ச்சல் எதிரொலியாக கோழி மற்றும் முட்டை விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.

தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் பரவுவதை தடுக்கும் பொருட்டு அரசால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோழி மூலம் தயாரிக்கப்படும் கிரில், லாலிபாப், சிக்கன் 65, தந்தூரி போன்ற உணவுகளும், முட்டை மூலம் ஆம்லேட், ஆப்பாயில், பொடிமாஸ் என்று விதவிதமான உணவுகளும் தயாரிக்கப்படுகின்றன. இதனால் கோழி வகை உணவுகளுக்கு அசைவ பிரியர்களிடம் தனி இடம் உண்டு. ஆனால் தற்போது பறவை காய்ச்சல் பரவி வருவதால் கோழி உணவுகளின் விற்பனையானது மந்தமாக உள்ளது.

இந்நிலையில் கேரள மாநிலத்தில் தீவிரமாக பரவி வரும் பறவைக் காய்ச்சல் நோயால் தமிழகத்தில் இந்த நோய் பரவி விடக்கூடாது என்பதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தமிழக அரசு கவனமாக செயல்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக தமிழகத்திற்கு கோழி, வாத்து முட்டைகளை கேரளாவில் இருந்து கொண்டு வரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து பறவைக்காய்ச்சல் அச்சம் காரணமாக தமிழ்நாட்டிலும் விற்பனை செய்யப்படும் பிராய்லர் கோழியானது 100 ரூபாய்க்கு விற்பனையான நிலைமாறி, தற்போது 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதோடு இறைச்சிக் கடைகளில் விற்பனை செய்யப்படும் கோழிக்கறி 180 ரூபாயில் இருந்து 120 ரூபாயாக குறைந்துள்ளது. மேலும் சில்லரை விலைக்கு விற்பனையாகும் முட்டைகள் 6  ரூபாயிலிருந்து குறைந்து தற்போது 5 ரூபாய் 50 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. எனினும் நாட்டுக்கோழி விலை மட்டும் குறையாமல் ரூபாய் 160 க்கு விற்பனை செய்யப்படுகிறது. பறவை காய்ச்சலின் தாக்கம் கோழி மற்றும் முட்டை விலையில் எதிரொலிக்கப்படுவதால்
இனி வரும் நாட்களில் கோழி மற்றும் முட்டை விலைகள் தொடந்து சரிவையே காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |