Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தொடர் சரிவில் முட்டை விலை… கோழிப் பண்ணையாளர்கள் கவலை..!!

முட்டை உற்பத்தி அதிகரிப்பால் தேக்கம் ஏற்பட்டு கடந்த நான்கு நாள்களில் முட்டை விலை 45 காசுகள் சரிந்துள்ளது என்று கோழிப் பண்ணையாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், முட்டை ஒன்றின் கொள்முதல் விலையை 3 ரூபாய் 87 காசுகளிலிருந்து நேற்று ஒரேநாளில் 17 காசுகள் குறைந்து 3 ரூபாய் 70 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

Image result for namakkal Poultry

கடந்த 1ஆம் தேதி முட்டை ஒன்றின் கொள்முதல் விலை 4 ரூபாய் 15 காசுகளாக இருந்த நிலையில் ஒரேநாளில் 25 காசுகள் குறைக்கப்பட்டு 3 ரூபாய் 90 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 2ஆம் தேதி 2 காசுகள் உயர்த்தப்பட்டு, மீண்டும் 4ஆம் தேதி ஐந்து காசுகள் குறைக்கப்பட்டு 3 ரூபாய் 87 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

Image result for Poultry

இந்நிலையில் தொடர்ந்து முட்டை விற்பனையில் தேக்கம் ஏற்பட்டதால் முட்டை கொள்முதல் விலையை மேலும் 17 காசுகள் அதிரடியாக குறைத்து 3 ரூபாய் 70 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.கடந்த நான்கு நாள்களில் 45 காசுகள் விலை குறைப்பு குறித்து கோழிப் பண்ணையாளர்கள் கூறும்போது, “தற்போது வட மாநிலங்களில் ஷட் பூஜை பண்டிகையால் முட்டை விற்பனை மந்தம் ஏற்பட்ட நிலையில் அங்கு கடுமையாக விலை சரிந்துள்ளது.

Image result for namakkal Poultry

மேலும் தமிழ்நாட்டில் தொடர்ந்து முட்டை உற்பத்தி அதிகரித்துள்ளதால் தேக்கம் ஏற்பட்டு விற்பனை சரிந்து விலை மேலும் குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விற்பனையை அதிகரிக்கவே மீண்டும் விலை குறைக்கப்பட்டிருக்கிறது. வரும் நாள்களில் ஐயப்பன் கோயில் சீசன் தொடங்கவுள்ள நிலையில் முட்டை விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது” என்று தெரிவித்தனர்.

Categories

Tech |