அதிகமாக முட்டை சாப்பிடுவது நமது உடலுக்கு தீமை தரும் என ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது.
சாப்பாட்டில் நாம் எடுத்துக்கொள்ளும் முட்டை சத்து நிறைந்தது என்று கூறுவதுண்டு. ஆனால் வாரத்தில் ஏழு முட்டை அல்லது அதற்கும் அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு விரைவில் மரணம் வருவதற்கான வாய்ப்பு 23 சதவீதம் அதிகரிப்பதாக அமெரிக்க ஆய்வு ஒன்று குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக 7 முட்டை அல்லது அதற்கும் மேல் சாப்பிடும் நடுத்தர வயது உடையவர்கள் இந்த ஆபத்தை அதிகம் சந்திக்கின்றனர்.
இந்த ஆய்வை மேற்கொண்ட ஹார்வர்ட் குழு 20 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்களை 27 வருடங்களாக ஆய்வுக்கு உட்படுத்தி இந்த முடிவை வெளியிட்டுள்ளது. அதிகமாக முட்டை சாப்பிடும் பழக்கம் வலிப்பு, இதயநோய் போன்ற பல்வேறு நோய்களை உடலுக்குள் இழுத்து வருகிறது. முட்டையில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பு இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
முட்டைக்கும் இதய நோய்க்கும் தொடர்பு இல்லை என்றாலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 20 வருட இடைவெளியில் அதிகமாக முட்டை சாப்பிட்ட 23 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர். இது முட்டை சாப்பிடுபவர்களின் பாதுகாப்பற்ற தன்மையை உணர்த்துகிறது.
அனைத்து உணவு வகைகளையும் போன்றதுதான் முட்டை மிகக் கேடு அல்லது மிக நன்று என தெளிவாக நிர்ணயம் செய்ய இயலாது என்றும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. முட்டை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நம்மை அளவாக உண்டு வளமாக வாழ எச்சரித்துள்ளது.