லாரி வாடகை உயர்வின் காரணமாக விலைவாசி உயர்வு ஏற்படும் என்பதால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் லாரி தொழிலை நடத்த முடியாமல் அதன் உரிமையாளர்கள் திணறுகின்றனர். இதனால் டீசல் விலை உயர்வு, மோட்டார் தொழிலை பாதுகாக்க வேண்டும், சுங்கச்சாவடி பாஸ்ட் டேக்கில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 15 ஆம் தேதி முதல் காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று நள்ளிரவு முதல் அனைத்து லாரிகளின் வாடகையையும் 30 சதவீதம் உயர்த்தப்படும் என்று லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மேலும் இந்த அறிவிப்பானது இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் அறிவித்துள்ளது. லாரி வாடகையை உயர்த்தபடுவதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள், உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.