புதிதாக உருவாக்கப்பட்ட ஏவுகணை சுமார் 1500 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இலக்கையும் கூட குறிவைத்து தாக்கி அழித்ததாக வடகொரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வட கொரிய அரசாங்கம் புதிதாக ஏவுகணை ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் சுமார் 1,500 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் தனது இலக்கையும் கூட இந்த ஏவுகணை மிகவும் சரியாக தாக்கி அழித்ததாக அதனை உருவாக்கிய வட கொரியா தெரிவித்துள்ளது.
இதனையடுத்து நீண்ட நாட்கள எந்தவித சோதனையையும் செய்யாமலிருந்த வடகொரியாவின் தற்போதைய இந்த செயல் தீபகற்ப பொதுமக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.