Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

“எடுத்த முடிவ , மாத்திக்க முடியாது” …! டி வில்லியர்ஸ் திட்டவட்டம் …! தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் போர்டு…!!!

என்னுடைய ஓய்வு முடிவை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பில்லை என்று  டி வில்லியர்ஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் . 

தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான ஏபி டி வில்லியர்ஸ், கடந்த 2010 ம் ஆண்டு சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக சமூக வலைதளத்தில் தெரிவித்தார். இவருடைய இந்த திடீர் ஓய்வு முடிவு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே  உலகக் கோப்பை டி 20  போட்டியில் டி வில்லியர்ஸை  விளையாட வைக்கும் முயற்சிகளும்  எடுக்கப்பட்டு வந்தது. டி வில்லியர்ஸ் கடந்த 2019ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் தென்னா ஆப்ரிக்கா அணியில் இடம் பெற விருப்பம் தெரிவித்தார்.

இவருடைய விருப்பத்திற்கு தென் ஆப்ரிக்கா தேர்வுக்குழு நிராகரித்துவிட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஏபி டிவில்லியர்ஸ் 454 ரன்களும், இந்த சீசனில் 7 போட்டிகளில் 207 ரன்களும் எடுத்திருந்தார். தற்போது டி வில்லியர்ஸ் தன்னுடைய ஓய்வு அறிவிப்பை திரும்ப பெறுவதற்கு மறுப்பு தெரிவித்ததாக தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் போர்டு  தகவலை தெரிவித்துள்ளது. இதனால் மேற்கிந்திய தீவின் தென் ஆப்ரிக்கா அணி விளையாட உள்ள டி 20 தொடரில் ஏபி டி வில்லியர்ஸ் இடம்பெற மாட்டார்.

Categories

Tech |