தேர்தலுக்குப் பிறகுதான் மாணவர்களின் கல்வி கடன் ரத்து பற்றியும் தெரிய வரும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்
ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் “தேர்தல் வரும்போதுதான் மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்வது பற்றி தகவலும் தெரியவரும். 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு பொதுத் தேர்வின் போது நிச்சயமாக நடைபெறும்.
மேலும் பள்ளி கல்வித்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை என இரண்டு துறைகளில் கருத்துகளை கேட்டறிந்த பிறகு குறிப்பிட்ட வகுப்புகளை திறப்பது குறித்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முடிவெடுப்பார். அதுமட்டுமன்றி பள்ளி திறப்பது குறித்து கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கருத்து இந்த வாரத்தின் இறுதிக்குள் கேட்டு அறியப்படும்” என கூறினார்.