செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், எங்கள் தாய் மொழியில் எங்கள் இறையின் முன்பு வழிபாடு இருக்க வேண்டும் என்று எங்களுடைய கோரிக்கை அல்ல உரிமை. நாடு என்னுடையது, கோவில் என்னுடையது, தெய்வம் என்னுடையது என் மொழி தமிழ் என் மொழியில் தான் வழிபாடு இருந்திருக்க வேண்டும், இருக்க வேண்டும்.
ஆனால் இங்கு சட்டங்கள் தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும் என்று இருக்கிறது, தமிழ் தான் அர்ச்சனை செய்யப்படும் என்று இருக்க வேண்டும் மாற வேண்டும், அதை மாற்றுவோம். மாற்ற வேண்டும் என்பதுதான் எங்களுடைய போராட்டத்தின் தொடக்கம். இங்கே இப்போது அனைத்து சாதியும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் வருகிறது, ஆனால் அதை முழுமையாக நிறைவேற்றி செயல்படுத்த முடியவில்லை என்கின்ற எதார்த்தம் இருக்கிறது.
நீங்கள் எல்லாம் அறிவீர்கள். ஆகம விதி ஆகமப்படி அந்த கோவில்களில் வழிபட வேண்டும், ஆகம விதி என்பது ஆரிய சதிதான், ஆகமம் என்பது இறைபனுவல். எங்களுக்கு இல்லாத மந்திரம் எங்களுக்கு இல்லாத இறை வழிபாடுநெறி வேற எந்த மொழியில் இருக்கிறது என தெரிவித்தார்.