Categories
தேசிய செய்திகள்

எடியூரப்பா தலைமையிலான அரசு திவாலாகிவிட்டது – சித்தராமையா…!!

கர்நாடக அரசு 4 லட்சம் கோடி ரூபாய் கடனில் தத்தளிப்பதாகவும் முதலமைச்சர் திரு எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு திவாலாகி விட்டதாகவும் காங்கிரஸ் முன்னாள் முதலமைச்சர் திரு சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.

பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடந்த காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவரும் கர்நாடகாவின் முன்னாள் முதல் அமைச்சருமான திரு சித்தராமையா கொரோனா சூழலிலும் பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கியதில் முதலமைச்சர் எடியூரப்பா அரசு 2000 கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டினார். இக்கட்டான காலத்தில் நடந்த இந்த முறைகேட்டை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனத் தெரிவித்தார்.

கர்நாடக மாநில அரசுக்கு தற்போது 4 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளதாகவும் ஆண்டுக்கு 23 ஆயிரம் கோடி ரூபாய் வட்டி கட்ட வேண்டிய நிலை உள்ளதாகவும் அவர் கூறினார். இதுபோன்ற சூழ்நிலையில் மாநிலத்தில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற சாத்தியம் இல்லை என்று தெரிவித்த திரு சித்தராமையா கர்நாடகாவில் பாஜக அரசு திவாலாகி விட்டதாக கூறினார்.

Categories

Tech |