இந்தியாவில் அனைத்து வங்கி கணக்குதாரர்களும் அதிகளவில் ஏடிஎம்மை பயன்படுத்துகின்றனர். கொரோனா தொற்று அச்சத்தால் பொது இடங்களுக்கு செல்வதை மக்கள் தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில் வங்கிகள் தங்களுக்கு வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் மூலமாக சேவைகளை வழங்கி வருகிறது. மேலும் வங்கிக்கு வருகை புரிவதை தவிர்த்து ஏடிஎம், இணையதளம் ஆகியவற்றின் மூலமாக பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுமாறு வங்கிகள் வடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. அந்த அடிப்படையில் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வீட்டில் இருந்து ஏடிஎம் கார்டு பெறும் வசதியை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறது.
மேலும் ஏடிஎம்-களில் அரங்கேறும் பண மோசடிகளை தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ஏடிஎம் பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும். தற்போது இந்த கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ஒரு மாதத்தில் முதல் 5 முறை மட்டுமே இலவசமாக ஏடிஎம்-யில் பணம் எடுக்க முடியும். அதுவும் உங்களுடைய கணக்கு உள்ள வங்கி ஏடிஎம்களில் எடுத்தல் மட்டுமே இலவசம். 5 முறைக்கு மேல் நீங்கள் பணம் எடுத்து கொண்டாலும், அதில் பணம் இல்லாத பரிவர்த்தனைகள் செய்தாலும் கட்டணம் வசூலிக்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.
அதுமட்டுமின்றி மெட்ரோ நகரங்களில் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏடிஎம் அல்லாத வேறு வங்கிகளில் மாதம் 3 முறை மட்டுமே இலவசமாக பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். பிற நகரங்களில் 5 முறை இலவசம் ஆகும். அதன்பின் ஒரு முறை பண பரிவர்த்தனை ஏடிஎம் கட்டணமாக 21 ரூபாய் வசூலிக்கப்படும் புதிய விதிமுறையானது வரும் 2022 ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது. மேலும் இந்த ஏடிஎம் கட்டணம் தொடர்பாக அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதனைதொடர்ந்து வங்கிகள் தங்களது அதிகாரப்பூர்வ இணையதளங்களில் இது குறித்து வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவித்து வருகின்றன.