தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை சந்திக்கிறார்.
சென்னை ராஜ்பவனில் இன்று மாலை ஆளுநரை சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகிறார். ஒவ்வொரு மாதமும் கொரோனா தொடர்பான தமிழக அரசு எடுத்து வரக் கூடிய தடுப்பு பணிகள் என்னென்ன ? உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் அடங்கிய அறிக்கையை தமிழக ஆளுநரிடம் தமிழக முதல்-அமைச்சர் நேரில் சந்தித்து வழங்கி வருகின்றார். அந்த அடிப்படையிலான சந்திப்பு இன்று மாலை நடைபெறுகிறது.
தமிழகத்தை பொருத்தவரை ஒட்டுமொத்தமாக கடந்த மார்ச் மாதம் தொடங்கி நேற்று வரை பார்த்தோம் என்றால் கொரோனா பாதிப்பு கொண்டவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 69 ஆயிரத்து 992 பேராக உள்ளது 9 லட்சத்து 45 ஆயிரம் பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்ப கூடிய நிலையில் தற்போதைய நிலையில் தமிழக அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு விஷயங்கள் குறித்து தமிழக முதலமைச்சர் தமிழக ஆளுநரிடம் எடுத்துரைத்தார் என்று எதிர்பார்க்கபடுகிறது.
இதுதவிர 7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக பல்வேறு விதமான கோரிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஆளுநரிடம் இருக்கின்றார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வந்திருந்த போது கூட நேரடியாக தமிழக அரசு சார்பில் இது தொடர்பாக வலியுறுத்தப்பட்டதாக சொல்லப்பட்ட நிலையில் ஆளுநரிடமும் முதல்வர் பேச இருப்பது குறிப்பிடத்தக்கது.