Categories
அரசியல் மாநில செய்திகள்

சொன்னதை செய்த எடப்பாடி…. திமுக வேஸ்ட், அதிமுக சூப்பர்…. அங்கீகாரம் கொடுத்த சீமான்…!!

எங்க பிள்ளைகள் பற்றி பேசுவதற்கு திமுகவுக்கு எந்த தகுதியும் கிடையாது என சீமான் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், எங்க பிள்ளைங்கள பத்தி பேச திமுகவிற்கு எந்த தகுதியும் கிடையாது. இந்திய நாட்டின் ஆட்சியில், ஒரு மாநில அரசு கட்சி தொடர்ச்சியாக 18 ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில் பங்கு வைத்து ஒரு கட்சி இருக்கிறது என்றால் அது திமுகதான். அன்னைக்கு எங்களுடைய பிள்ளைகள் விடுதலைக்கு, வெளியே எடுத்து வருவதற்கு எந்த வேலையும் செய்யாமல், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மக்களின் உணர்வு நிலை, கொதி நிலையை பார்த்துவிட்டு திடீரென்று ஆளுநருக்கு கடிதம் கொடுக்குது.

பிரதமரிடம் தொலைபேசியில் நேரடியா பேசுறீங்களே…. 7பேரை விடுதலை செய்யுங்க என்று சொல்ல வேண்டிய தான. இதுதான் நாடக அரசியல் திமுக அதை ஒப்பிடும்போது எடப்பாடி பழனிச்சாமி போதும் என்ற கேள்விக்கு..  என்னைப் பொருத்தவரைக்கும், சில செயல்களில் அதிமுகவை பாராட்டணும். 7.5 விழுக்காடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, என்னுடைய தம்பி பேரறிவாளனுக்கு நாங்க எவ்வளவோ போராடிப் கொண்டுவர முடியாத சிறை விடுப்பு கொடுத்தது, தம்பி ரவிச்சந்திரனுக்கு சிறை விடுப்பு கொடுத்தது, தம்பி பயாஸுக்கு கொடுத்தது… இப்போ உடல் நலம் கருதி சிறை விடுப்பை நீடித்தது இது எல்லாம் அதிமுக செய்தது… முதல்வர் எடப்பாடி பணிசாமி எண்ணிடம் சொன்னார், என்னால் என்ன முடியுமோ அதை செய்றேன் என்றார், அதனை நான் பாராட்டுறேன்.

பாஜக – அதிமுக கூட்டணியை நான் கடுமையாக எதிர்க்கிறேன். அதிமுக உயிர்ப்போடு இருக்கணும் கத்துக்கணும், தப்பிக்கும் என்றால் பாரதிய ஜனதாவை கைவிடவேண்டும். இந்திய தேர்தலுக்கு காங்கிரஸ்சை பிடித்துக் கொள்கிறீர்கள், பிஜேபியை கூட வெச்சு இருக்கீங்க… இந்திய நாட்டை யார் ஆள்வது ராகுலா ?  மோடியா ?  அப்படிகின்றது சரி….

தமிழ்நாட்டு அரசியலில் அவர்கள் அவசியமற்றது. அது அதிமுகவுக்கு பேராபத்தாக அமையும். அதே போல தான் காங்கிரஸ்ஸை திமுக கையில் வைத்து தொங்கி கொண்டு இருப்பது. அவர்கள்  ரெண்டு கட்சியையும் கைவிடனும்,  அதனோடு கூட்டணி வைக்ககிறதை நான் எதிர்க்கிறேன் என சீமான் தெரிவித்தார்.

Categories

Tech |