ஸ்பெயின் நாட்டில் எரிசக்தி விலை உயர்வால் மக்கள் பாதிப்படைந்திருக்கிறார்கள்.
உக்ரைன்-ரஷ்ய போரால் ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத்தில் இழப்பை சந்திருக்கின்றன. இதில் ரஷ்ய நாட்டிடமிருந்து இறக்குமதியாகும் எரிசக்தியை நம்பி இருந்த நாடுகள் பொருளாதாரத்தில் வீழ்ச்சி அடைந்திருக்கின்றன. அதன்படி, ஸ்பெயினில் பொருளாதார தட்டுப்பாடு, பணவீக்கம் போன்றவற்றால் நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.
அந்நாட்டில் இப்போது கோடைகாலம் என்பதால் மின் நுகர்வு உச்சத்தில் இருக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. எனவே, மின் கட்டணங்கள் உயர்ந்து மக்கள் அதிக அளவில் பாதிப்படைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிசக்தி விலை உயர்வு காரணமாக ஸ்பெயின் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்படைந்திருக்கிறது.
மேலும், மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரம் மின்சக்தியால் தான் இயங்கிவருகிறது. எனவே, விலை உயர்வை சமாளிப்பதற்காக ஸ்பெயின் அரசாங்கம் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. எனினும், அந்த நடவடிக்கைகள் மூலம் நாட்டின் பொருளாதார தட்டுப்பாடு மேலும் அதிகமாகியிருப்பதாக பொருளாதார வல்லுனர்கள் கூறியிருக்கிறார்கள்.