Categories
தேசிய செய்திகள்

பொருளாதார திட்ட மதிப்பு ரூ. 20 லட்சம் கோடி அல்ல, வெறும் ரூ.1,86,650 கோடி மட்டுமே – ப.சிதம்பரம் ட்வீட்!

பொருளாதார திட்ட மதிப்பு ரூ. 20 லட்சம் கோடி அல்ல, வெறும் ரூ 1,86,650 கோடி மட்டுமே என ப.சிதம்பரம் ட்விட்டரில் குற்றம் சாட்டியுள்ளார்.

பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும்,சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். அதன்படி ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து 5ம் கட்டங்களாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மே 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

இந்த நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம், பிரதமர் மோடி மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த பொருளாதார ஊக்கத் திட்டத்தின் மதிப்பு ரூ 20 லட்சம் கோடி அல்ல, வெறும் ரூ 1,86,650 கோடி தான். ரூ 1,86,650 கோடி மட்டுமே! என குறிப்பிட்டுள்ளார் . மேலும் இந்த எண்ணை எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள். இன்னும் சில மாதங்களில் உண்மை தெரிந்துவிடும் என அவர் கூறியுள்ளார்.

நிர்மலா சீதாராமன் அறிவித்த திட்டங்களில் சிறு, குறு தொழிலாளர்கள், நடுத்தர மக்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், விவசாயிகள், ஏழை மக்கள், விவசாயிகள், மீனவர்கள், கனிமங்கள், நிலக்கரி உற்பத்தி, ராணுவ தளவாட உற்பத்தி, மின் விநியோகம் விண்வெளி அணுசக்தி துறை, 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம், மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு என ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |