Categories
உலக செய்திகள்

“இவ்ளோ வட்டியா?”…. கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய பாகிஸ்தான்….!!!

பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் நிலையில், அதிகமான வட்டிக்கு நூறு கோடி டாலர்களை கடனாக பெற்றிருக்கிறது.

பாகிஸ்தானில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. பிற நாடுகளிலிருந்து வாங்கிய கடனை செலுத்த நெருக்கடி அதிகரித்தது. எனவே, இதற்கு முன் இல்லாத அளவிற்கு சுமார் 7.95% வட்டிக்கு புதிதாக நிதி திரட்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

7 வருடங்களில் திரும்ப செலுத்தும்படி, லாகூர்-இஸ்லாமாபாத் நெடுஞ்சாலைக்குரிய ஒரு பகுதியை பிணயமாகக் கொடுத்து இந்த கடனை வாங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நாட்டின் அன்னிய செலவாணி தட்டுப்பாடு கடுமையாக உயர்ந்திருக்கிறது. இந்நிலையில் அதனை தற்காலிகமாக சமாளிப்பதற்கு இவ்வளவு தொகையை வாங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |