Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு நீட்டிப்பு எதிரொலி… மே 17 வரை விமான சேவை ரத்து: மத்திய அரசு..!

மே 17ம் தேதி வரை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளுக்கான ரத்து நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டு சரக்கு விமானங்களுக்கு இது பொருந்தாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் 25ம் தேதி அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் கொரோனா பரவலின் வேகம் குறையாததால், மே 3-ம் தேதி வரை ஊரடங்கு 19 நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கு தொடர்பான சில கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியது.

இந்த நிலையோடு 2ம் கட்ட ஊரடங்கும் முடிவடைய உள்ள நிலையில், மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீடிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேசமயம் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிற வண்ண மாவட்டங்களுக்கு ஏற்ப விதிமுறைகள் மாற்றப்படும் என தெரிவித்திருந்தது. இதற்கான விரிவான வழிகாட்டும் நெறிமுறைகளை வெளியிட்டது.

சிவப்பு நிறப்பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடு தொடரும், அதேசமயம் ஆரஞ்சு பகுதிகளில் கட்டுப்பாடுகளுடன் தொழில்கள் செயல்பட அனுமதி வழங்கபடலாம். பச்சை நிறப்பகுதியில் விலக்கு வழங்க மாநில அரசு நிலையை ஆராய்ந்து உத்தரவுகள் பிறப்பிக்கலாம் என அறிவித்திருந்தது. இந்த நிலையில் மே 17ம் தேதி வரை விமான சேவை ரத்து நீடிக்கப்படுவதாக மத்திய அரசு தகவல் அளித்துள்ளது.

Categories

Tech |