இங்கிலாந்தில் வருகின்ற 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சிகிச்சைக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை 14 மில்லியனாக உயரும் என்று நிதி ஆய்வுகளுக்கான நிறுவனம் எச்சரித்துள்ளது.
இங்கிலாந்து தேசிய சுகாதார மையத்தில் கொரோனா சிகிச்சையைத் தவிர்த்து பிற மருத்துவ சிகிச்சையை பெறுவதற்காக காத்திருப்பவர்களின் பட்டியல் தற்போது பல மில்லியனாக உயர்ந்துள்ளது. இதனையடுத்து தற்போது வரை NHS ல் சிகிச்சை பெற வேண்டி காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் நபர்களுக்கு சிகிச்சை அளித்து முடிக்கவே வருகின்ற 2023 ஆம் ஆண்டு வரை ஆகும் என்று கருதப்படுகிறது.
இந்நிலையில் Institute For Fiscal studies என்னும் நிதி ஆய்வுகளுக்கான நிறுவனம் தற்போது இங்கிலாந்து தேசிய சுகாதார மையத்திற்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதாவது தேசிய சுகாதார மையத்தில் பிற மருத்துவ சிகிச்சையை பெறவேண்டி காத்திருப்பவர்களின் பட்டியல் தொடர்ந்து நீடித்துக் கொண்டே வந்தால் 2022 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் அவர்களின் எண்ணிக்கை 14 மில்லியனாக உயரும் என்று எச்சரித்துள்ளது.