Categories
உலக செய்திகள்

இதை சாப்பிட்டால் மன சோர்வு குறையும்…. அமெரிக்க ஆய்வு முடிவில் தகவல்…!!

அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் காளான் சாப்பிடுபவர்களுக்கு மனசோர்வு குறைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள பென் ஸ்டேட் என்ற மருத்துவ கல்லூரியை சேர்ந்த ஆய்வாளர்கள் 24 ஆயிரம் இளைஞர்களை பயன்படுத்தி ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். அந்த ஆய்வில் உணவில் காளானை சேர்த்தால் மன அழுத்தம் மற்றும் மன சோர்வு குறையும் என தெரியவந்துள்ளது.

ஏனெனில் காளானில்  ஏர்கொதியோனைன் என்ற வேதிப்பொருள் உள்ளதாகவும் இது மனச்சோர்வை குறைக்கும் தன்மை உடையதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் காளான் சாப்பிடாதவர்களுடன் ஒப்பிடுகையில் காளான் சாப்பிட்டவர்கள் மன சோர்வு இன்றி நிம்மதியாக உள்ளதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

Categories

Tech |