நாம் அன்றாட வாழ்க்கையில் எடுத்துக்கொள்ளும் உணவு சுவையாக இருக்கிறதா என்பதை மட்டும் பார்க்கும் நாம் அது எந்த அளவுக்கு நமக்கு சத்தாக உள்ளது என்பதை யாரும் கவனிப்பதில்லை.
பொதுவாக இறைச்சிகளில் அதிக அளவு உடலுக்கு கேடு விளைவிக்கும் கொழுப்புகள் உள்ளது. அசைவ உணவுகளை தொடர்ந்து நாம் எடுத்துக் கொண்டால் உடல் பருமன் அதிகரிக்கும். இதனை தொடர்ந்து ரத்த அழுத்தம், இதய கோளாறு பிரச்சனை ஏற்படும். அதிக அளவில் அசைவ உணவுகளை எடுத்து வந்தால் மாரடைப்பு பிரச்சனையை ஏற்படவும் வாய்ப்புள்ளது. அதே சமயம் தொடர்ந்து அசைவ உணவுகளை எடுத்துக் கொண்டு திடீரென அவற்றை கைவிட்டாலும் பிரச்சனை ஏற்படும்.
மூன்றிலிருந்து ஐந்து கிலோ வரை உடல் எடை திடீரென்று குறையும். 24% இதய நோய் ஏற்படும் வாய்ப்பு இருக்கும். இறைச்சியில் அதிக புரதச்சத்து இருக்கின்றது. இதனை குறைந்த அளவு நாம் எடுத்துக்கொண்டால் உடலில் புரதச் சத்து அதிகரிக்கும். சூடு காரணமாக ஏற்படும் சூடு கொப்பளம், வாய்ப்புண் போன்றவை ஏற்படாமல் இருக்கும். தினமும் தொடர்ந்து வேலை செய்து வருகிறீர்கள் என்றால் சைவம் அசைவம் என கலந்து சாப்பிடலாம். இதனால் எந்த பிரச்சனையும் இருக்காது. ஆனால் தொடர்ந்த அசைவ உணவாக எடுத்துக் கொண்டால் மட்டுமே உங்களுக்கு அதிக அளவு பாதிப்பு ஏற்படும்.