ஜப்பானின் நேஜ் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.
ஜப்பானின் நாட்டில் உள்ள கியூஷூ தீவின் ககோஷிமா நகரத்தில் நேஜ் பகுதியில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பதறிப்போன மக்கள் வீதிகளில் தன்சமடைந்தனர். மக்களுக்கு பீதியை ஏற்படுத்திய இந்த நிலநடுக்கம் நேஜ் பகுதியின் வடமேற்கே 174 கி.மீட்டர் தொலைவில் 237.7 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது என்று சொல்லப்படுகின்றது.
காலையில் ஏற்பட்ட நிலநடுக்க அளவு குறித்து தெரிவித்துள்ள அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் , இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது என்று உறுதி செய்துள்ளது. இதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது பொருட்சேதம் குறித்து எந்த தகவலும் இன்னும் வரவில்லை ஆனாலும் மக்கள் தொடர்ந்து பீதியில் இருந்து வருகின்றனர்.