இந்தோனேசியாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தோனேசியா, பசிபிக் பெருங்கடல்-இந்தியப் பெருங்கடல் பகுதியில் தீவுக்கூட்டங்கள் ஆயிரக்கணக்கில் உடைய நாடாக இருக்கிறது. மேலும், பூமத்திய ரேகையினுடைய மையப்பகுதியில் இருப்பதால் அடிக்கடி அங்கு நிலநடுக்கம் உணரப்படுகிறது. இந்நிலையில், அங்கு இன்று காலை நேரத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது.
ஸ்லவைசி என்ற தீவின் கொடம்பகு பகுதியிலிருந்து வடகிழக்கில் சுமார் 779 கிலோ மீட்டர் தூரத்தில் இன்று காலை நேரத்தில் பசுபிக் பெருங்கடலில் நிலநடுக்கம் உருவானது. இது ரிக்டர் அளவில் 6.0 என்ற அளவில் பதிவாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் அந்நாட்டின் நகர்களில் அதிர்வு ஏற்பட்டிருக்கிறது. கட்டிடங்கள் குலுங்கியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும், இதனால் உயிர் சேதங்கள் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.