தென்னமெரிக்காவில் ரிக்டரில் 6.1 ஆக பதிவாகிய மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்னமெரிக்காவில் பெருநாடு அமைந்துள்ளது. இந்த பெரு நாட்டின் வடமேற்கே ரிக்டரில் 6.1 ஆக பதிவாகிய மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 33.18 கிலோமீட்டர் ஆழத்தினை மையமாக கொண்டு உருவாகியுள்ளது.
இவ்வாறு உருவான இந்த நிலநடுக்கத்தால் பெரு நாட்டின் வடமேற்கே உள்ள ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளது. இந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கிய சுமார் 41 நபர்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளார்கள். இந்த தகவலை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.