இ-சேவை மையத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் கம்ப்யூட்டர், பிரிண்டர் போன்றவற்றை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மருங்குளத்தில் கிராம இ-சேவை மையம் இருக்கிறது. இந்த மையத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த கம்ப்யூட்டர், பிரிண்டர் போன்றவற்றை திருடி சென்றுள்ளனர். இந்நிலையில் இ-சேவை மையத்திற்கு வந்த அலுவலர்கள் கம்ப்யூட்டர், பிரிண்டர் ஆகியவை திருட்டு போனதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து கிராம நிர்வாக சேவை மைய நிர்வாகி ராஜேஸ்வரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.